ஐபிஎல் 2022-; குஜராத் அணி சூப்பர் வெற்றி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய பிளே ஆப் சுற்றில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
இதில், பட்லர் 89 ரன்களும், சாம்சன் 47 ரன்களும், படிக்கல் 28 ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து குஜராத்திற்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்த ஆரம்பத்தில், 3 ஓவரில் 30 ரன்களுக்கு 1விக்கெட் இழந்து விளையாடியது.
இதையடுத்து, டேவிட் மில்லர் 68 ரன்களும் , பாண்டியா 40 ரன்களும், , ஜில் 35 ரன்களும் அடித்தனர் . இதையடுத்து, 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.