ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (08:45 IST)

காருக்குள் வைத்து மனைவி, மாமியாரை கொன்ற கணவன்! உடலை வீசிவிட்டு தலைமறைவு!

கர்நாடகாவில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமனார், மாமியார், மனைவி என எல்லாரையும் காருக்குள் வைத்தே கொன்று விட்டு தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள முனகல் கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவரும் தாவணகெரே பகுதியை சேர்ந்த அண்ணபூரணி என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் அடிக்கடி கணவன் - மனைவி இடையே சண்டை, வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சில மாதங்கள் முன்னதாக அன்னபூரணி நவீனிடம் சண்டை போட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரை சமாதானம் செய்த நவீன் சமீபத்தில் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
 

அன்னபூரணியை வீட்டில் விடுவதற்காக அவரது பெற்றோரும் வந்துள்ளனர். பின்னர் அன்னபூரணியின் பெற்றோரை பஸ் ஏற்றிவிட நவீன் அன்னபூரணியோடு அவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது நவீனின் மாமனார், மாமியார் நவீனுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நவீன் காரில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மாமனார், மாமியார், காதல் மனைவி என மூன்று பேரையும் காருக்குள் வைத்தே அடித்துக் கொன்றுள்ளார். அதன்பின்னர் அவர்களது உடல்களை வெவ்வேறு பகுதிகளில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான நவீன தீவிரமாக தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K