வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (11:14 IST)

மேக்ஸ்வெல்லுக்கு காயம்… ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பின்னடைவு!

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஷ் திடீரென தாயகம் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியான நிலையில் இப்போது மற்றொரு வீரரான கிளன் மேக்ஸ்வெல் காயம் அடைந்துள்ள செய்தி வெளியாகி அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கோல்ஃப் வண்டியில் இருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வரும் நான்காம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீரர்கள் இல்லாத நிலையில் ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஆஸி அணிக்கு அரையிறுதிக்கு செல்ல முக்கியமான போட்டியாகும்.