வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 மே 2022 (15:38 IST)

“இவ்ளோ திறமை இருந்தா… கதவு திறக்க வாய்ப்பிருக்கு”… ஹர்திக் குறித்து கவாஸ்கர் கணிப்பு!

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. அவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்கையில் அவர் தோனியிடம் இருந்து அதிகம் கற்று இருப்பார் என தோன்றுகிறது.” என்க் கூறினார்.

மேலும் “இவ்வளவு கேப்டன்சி திறமை உங்களிடம் இருக்கும் போது இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நான் கண்டிப்பாக ஹர்திக்தான் அடுத்த கேப்டன் என சொல்லமாட்டேன். அதற்கான தகுதியோடு நான்கு பேருக்கு மேல் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.