திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (11:56 IST)

தோனி ஸ்டைலில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி: சுனில் கவாஸ்கர் பெருமிதம்

hardik
தோனி ஸ்டைலில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி இருப்பதாக சுனில் கவாஸ்கர் பெருமிதம் கொண்டுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து கருத்து கூறிபோது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்கையில் அவர் தோனியிடம் இருந்து அதிகம் கற்று இருப்பார் என தோன்றுகிறது. 
தோனியை சகோதரனாகவும் ஹீரோ போலவும் பார்ப்பவர்களில் ஒருவராக ஹர்திக் பாண்ட்யா இருந்தது .
 
வெற்றி பெற்ற பின் அதீத சந்தோஷம் இல்லாமல் இருப்பது,  பரபரப்பாக இருந்த போதிலும் பதட்டம் அடையாமல் இருப்பது தோனியின் ஸ்டைல் என்ற நிலையில் அதே ஸ்டைலில் தான் ஹர்திக் பாண்ட்யா உள்ளார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.