தோனிதான் எனக்கு பெரிய ரோல் மாடல்! – ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி!
நேற்றையை ஐபிஎல் போட்டியில் தகுதி சுற்றில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கிரிக்கெட் வீரர் தோனி குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்து ப்ளே ஆப் சுற்றுகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃபில் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19வது ஓவரிலேயே 191 ரன்களை குவித்து வெற்றியை பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “எனது வாழ்க்கையில் மஹி பாய் ஒரு பெரிய ரோல் மாடல். அவர் எனக்கு அன்பான சகோதரர், அன்பான நண்பர் மற்ரும் என் குடும்பத்தில் ஒருவர். அவரிடம் இருந்து நான் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என்று பேசியுள்ளார்.