1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Extra chairs to be allocated for Mumbai jammu Kashmir match

ரோஹித் ஷர்மாவுக்கு சிறப்பு சலுகை… ரஞ்சி போட்டிக்காக மைதானத்தில் கூடுதல் இருக்கை!

ரோஹித் ஷர்மா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான்.  இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியும் பறிக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை வரை அவரே கேப்டனாக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள ரஞ்சி போட்டியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடவுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள போட்டியில் அவர் விளையாடுகிறார். இந்த போட்டியைக் காண ரசிகர்கள் அதிகளவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மும்பை வான்கடே மைதானத்தில் கூடுதல் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!