தொடர்புடைய செய்திகள்
- கே.எல்.ராகுலை வாங்க துடிக்கும் லக்னோ அணி! – நாளை பட்டியல் சமர்பிக்க கடைசி நாள்!
- இலக்கை நோக்கி நெருங்கி வரும் நியூசிலாந்து: என்ன ஆகும் கான்பூர் டெஸ்ட்!
- விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே! – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!
- புதிய வகை வைரஸ் எதிரொலி: இந்திய அணியின் தென் ஆப்பிரி்க்கத் தொடர் ரத்தாகுமா?
- ஆஸி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் பேட் கம்மின்ஸ்… துணை கேப்டனாக ஸ்மித்!
தோனி சிஎஸ்கேவில் நீடிக்க தேவையில்லையா? – கவுதம் கம்பீர் கருத்தால் சர்ச்சை!
சிஎஸ்கே அணியில் நீடித்திருக்க வேண்டிய வீரர்கள் குறித்து பட்டியலிட்ட கௌதம் கம்பீர் தோனியின் பெயரை சொல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இன்றே அதற்கு கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் முக்கியமான வீரர்களாக ருத்ராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டூ ப்ளசிஸ், சாம் கரண் உள்ளிட்ட பெயர்களை சொல்லியுள்ளார். ஆனால் அதில் அணி கேப்டன் தோனியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்