1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:30 IST)

புதிய வகை வைரஸ் எதிரொலி: இந்திய அணியின் தென் ஆப்பிரி்க்கத் தொடர் ரத்தாகுமா?

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரமே தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருப்பதாகவும் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த தொடருக்கு இந்திய அணி செல்லும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன