தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணிக்கு திரும்ப கேப்டன் பதவி உதவுமா? அஸ்வின்
- இந்திய அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது: கிரிகெட் வாரியம் அதிரடி
- பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு
- விறுவிறுப்பான கடைசி போட்டி; ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
- அனைத்தும் கோலியின் விருப்பம்தான்: கிரிக்கெட் வாரியம்...
கோலி இருக்க பயமேன்: கங்குலி பெருமிதம்
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுபயணத்திலும் சிறப்பாக செயல்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றாலும், ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்திய அணி, இந்த ஆண்டு அஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
இந்த சுற்றுப்பயணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கூறியதாவது:-
கோலி தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்படும். கோஹ்லியின் பேட்டிங் திறன் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு மண்ணில், அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.
வேகத்தில் மிரட்டும் பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரும் வெளிநாட்டு மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற பெரும் பங்கு வகிப்பார்கள். கோலி பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் வென்றது என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்