அனைத்தும் கோலியின் விருப்பம்தான்: கிரிக்கெட் வாரியம்...

Last Updated: வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:20 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதை முடித்துக்கொண்டு அடுத்து இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டில் விளையாட உள்ளது. 
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி முடித்த நிலையில் தற்போது டி-20 நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 
 
தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் வருகிற 24 ஆம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்னர், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை கொழும்புவில் நடைபெறுகிறது. 
 
இந்த தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் கோலி ஓய்வு பெறவுள்ளாராம். இது குறித்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாவது, இலங்கை போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்பினால் ஓய்வு அளிக்கப்படும். போட்டியில் விளையாடுவதா? வேண்டாமா? என்பது அனைத்து அவர் விருப்பத்தை சார்ந்தது என தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :