தொடர்புடைய செய்திகள்
- ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நியாயம். இந்தியாவிற்கு ஒரு நியாயமா? கோபத்தில் ஹர்பஜன் சிங்
- ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நியாயம். இந்தியாவிற்கு ஒரு நியாயமா? கோபத்தில் ஹர்பஜன் சிங்
- ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் அதிரடி நீக்கம்
- ஸ்மித்துக்கு வாழ்நாள் தடை?: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்
- உங்களால் நாட்டிற்கே அவமானம்; ஸ்மித்தை வறுத்தெடுக்கும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள்
ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது: கங்குலி சாடல்...
போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அனி வீரர்கள் செய்தது முட்டாள்தனம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி மேலும் கூறியதாவது, 1981 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக கடைசி பந்தை உருட்டி விட்டது முதல் ஆஸ்திரேலியா அணி இப்படித்தான் கிரிக்கெட் விளையாடி வருகிறது.
2008-ல் நான் 60 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்த போது ரிக்கி பாண்டிங் தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் என்று சாதித்தார். நான் அவுட் ஆனவுடன் போட்டியின் போக்கே மாறிவிட்டது.
எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் இப்படி முட்டாள்தனமாக யோசிக்க தூண்டுகிறது. ஸ்மித் இதனை செய்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஸ்மித், பேங்க்ராப்ட், வார்னர் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம். உண்மையில் ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது.
ஸ்மித், பேங்கிராப்டுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். 6 மாதகாலம் அல்லது ஆயுள் தடை என்றெல்லாம் நான் கூற மாட்டேன், ஆனால் 2-3 போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும் என கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்