1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (13:55 IST)

ஸ்மித்துக்கு வாழ்நாள் தடை?: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய குற்றசாட்டிற்காக ஆஸ்திரேலியா கிரிகெட் வாரியம், அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க போவதாக கூறப்படுகிறது.

 
 
கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பான்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை ஏதோ ஒரு பொருளை வைத்து சேதப்படுத்தினார். இந்த விவகாரம் கேமாரா மூலம் வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியவந்தது.
 
இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் விசாரித்தபோது, அவர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சுமித்தை கேப்டன் பதவியில் இருந்தும், டேவிட் வார்னரை துணைக் கேப்டன் பதிவியில் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. மேலும், ஸ்மித்திற்கு இந்த டெஸ்ட் தொடரின் அவரது சம்பளம் அனைத்தையும் அபராதமாக விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், பந்தை சேதப்படுத்தி நாட்டின் பெயரை அவமதித்த குற்றத்திற்காக ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதிக்க போவதாக பரவலாக கூறப்படுகிறது.