செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

கோலி & ரோஹித் ஷர்மா கண்டிப்பா தேவை… முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!

டி 20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் பெற்ற மோசமான தோல்வி காரணமாக மூத்த வீரர்களை கழட்டிவிடும் முனைப்பில் பிசிசிஐ உள்ளது. அதன் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான திலீப் வெங்சர்க்கார் “இந்திய அணிக்காக இருவரும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இருவரும் இன்னும் சில காலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டியவர்கள். பிசிசிஐ இந்த விஷயத்தில் வீரர்களின் வயதைப் பார்க்காமல், பிட்னஸ் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை பார்க்கவேண்டும். கோலி, இரண்டிலும் இப்போது சிறப்பான நிலையில் உள்ளார். அதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.