தொடர்புடைய செய்திகள்
- சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி!
- விராட் கோலியை கேப்டன் பதவியில் நீட்டிக்க அனுமதித்து இருந்தால் ....- ரஷீத் லத்தீப் தகவல்
- நடிகர் விஜய்க்கு வில்லனாகும் 'தல' தோனி ?
- ரஜினியின் 'ஜெயிலர் 'படத்தைப் பார்த்த மங்கோலிய முன்னாள் அதிபர்...என்ன சொன்னார் தெரியுமா?
- தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் அவர்தான்… கோலியே புகழ்ந்த வீரர்!
ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை விட்டு விலகும் கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது பெரிய சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் கம்பீர் ஒரு கோபமானவர் என்ற அடையாளமே அவர் மேல் இருக்கிறது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.