1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 5 அக்டோபர் 2022 (20:43 IST)

முதல் டி-20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆஸ்திரேலியா !

Australia
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் – ஆஸதிரேலியாவுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி இன்று  நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணி  பேட்டிங் செய்தது.  இதில், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர் 14ரன்களும், கிரீட் 14 ரன்களும், பிஞ்ச் 58 ரன்களும் அடித்து அணியின் வெறறிக்கு உதவினர்.

3 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2 வது டி-20 வரும் 7 ஆம் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj