திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (20:42 IST)

நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இளம் வீரர்களின் இந்திய அணி சாதிக்குமா?

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்தியாவிடம்( 2-1) இழந்துள்ள நிலையில்,  நாளை நடக்கவுள்ள ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க ணி உள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்  நிலையில், தவான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதனால், இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj