வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (09:41 IST)

எப்பா தம்பி பந்தை வெளிய அடிச்சுவிடு! – சார்ஜா க்ரவுண்டை சுற்று போட்ட ரசிகர்கள்!

நடப்பு ஐபிஎல் தொடர் அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மைதானத்திற்கு வெளியே விழும் பந்துகளை எடுக்க ரசிகர்கள் காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சார்ஜா மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் அணிகள் அதிகமான ரன்களை பெறுகின்றன. மேலும் பல வீரர்கள் சிக்ஸர் அடிக்கும்போது பந்து மைதானத்தை தாண்டி சென்று விழும். அப்போது அவ்வழியாக செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள் அதை எடுத்துக் கொள்வர்.

இதனால் சார்ஜாவில் ஐபிஎல் போட்டி நடந்தாலே ரசிகர்கள் சிலர் மைதானத்தை தாண்டி வரும் பந்துகளை எடுத்து செல்ல காத்திருக்க தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.