7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள்: ஐதராபாத் வெற்றிக்கு காரணம் இவர்தானா?

7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள்:
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (07:56 IST)
7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள்:
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்தது

டேவிட் வார்னர் மற்றும் சகா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி அதிரடியாக பவுண்ட்ரிகளையும் சிக்சர்களையும் அடித்தார்கள். இதனால் ஸ்கோர் 200ஐ தாண்டியது

ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் சூப்பராக ரன்களை குவித்தனர் என்றால் இன்னொரு பக்கம் பந்துவீச்சில் ரஷீத்கான் மற்றும் நடராஜன் ஆகியோர் அசத்தினர். குறிப்பாக ரஷீத்கான் நேற்று 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நேற்று அவர் வீசிய 4 ஓவர்களில் 17 பந்துகளில் டாட்பால்கள் ஆகும். அதாவது வீசிய 4 ஓவர்களில் கிட்டத்தட்ட 3 ஓவர்களில் அவர் ரன் ஏதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஐதராபாத் அணியின் வெற்றிக்கு நேற்று பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் ஒரு காரணம் என்றால் ரஷீத்கான் அபார பந்துவீச்சு இன்னொரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி அணியை நேற்று 88 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ஹைதராபாத் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் இதேபோல் நல்ல ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :