வடா பாவ் ரோஹித்… சமோசா பாவ் சவுரவ் திவாரி – எல்லை மீறும் சேவாக்!

Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:35 IST)

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐபிஎல் தொடர் பற்றிய விமர்சன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவும் சவுரவ் திவாரியும் உடல் எடையை மெயிண்டெய்ன் செய்யாமல் குண்டாக இருப்பதால் இப்படி அவர் கேலி செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக கோலி டிவில்லியர்ஸ் மற்றும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை அவர் இதுபோல கேலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :