1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Fan interruption to messi in football ground

கோல் அடிக்க முயன்ற மெஸ்ஸி; குறுக்கே புகுந்த ரசிகர்! – கால்பந்தாட்டத்தின்போது பரபரப்பு!

Sports
கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சி கோல் அடிக்க முயன்றபோது ரசிகர் ஒருவர் குறுக்கே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் ரசிகர் ஒருவர் தடுத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்சி விளையாடி வரும் நிலையில் நேற்று நடந்த லெ க்ளாசிக் போட்டியில் பிஎஸ்ஜி அணியும், மெர்செயில் அணியும் மோதிக் கொண்டன.

அப்போது கிடைத்த ஃப்ரீ கிக்கில் மெஸ்சி கோல் அடிக்க தயாரானபோது திடீரென மைதானத்திற்குள் புகுந்த எதிரணியான மெர்செயில் அணியின் ரசிகர் ஒருவர் மெஸ்சியை கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளார். பின்னர் அதிகாரிகள் சிலர் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தாமதமாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அணிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்துக்கு கூடுதல் பலமா?