1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (15:20 IST)

ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் முடிந்தது!

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம் முடிவடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டில் இந்தியாவில் நடக்கும். இதில், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி அணி , பங்சாப் கிங்ஸ்,  ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே விளையாடி வரும் நிலையில்  மேலும் 2 அணிகளை ஏலம் எடுப்பது குறித்த தகவல் வெளியானது.

இந்நிலையில், துபாயில் சர்ப்பிக்கப்பட்ட நிறுவனங்களின் ஏல சரிபார்ப்பு நடந்து கொண்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. எனவே விரையில் இரு புதிய அணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இரு புதிய அணிகளை வாங்க அதானி குழுமம் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட 22  நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.