ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:50 IST)

எங்கள் அணிக்கும் மும்பைக்கும் ஒரே வித்தியாசம்தான்… ஆர் சி பி கேப்டன் டு பிளசிஸ் கருத்து!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதையடுத்து பேட் செய்த ஆர் சி பி அணியில் பாஃப் டு பிளசீஸ், ரஜத்படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி 196 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அடி வெளுத்து வாங்கியது. அந்த அணியின் இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டத்தை மிகவும் எளிதாக்கினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாப் டு பிளசீஸ் “ நாங்கள் இந்த போட்டியில் செய்த தவறுகளில் ஒன்று டாஸை இழந்தது. இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என தெரிந்ததால் 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நானும் பட்டிதாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த போது பும்ரா மூலமாக மும்பை கம்பேக் கொடுத்தது. அவர்தான் எங்களுக்கும் மும்பை அணிக்கும் இடையிலான வித்தியாசம். அவர் எங்கள் அணியில் அவர் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.