வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (10:15 IST)

தோனியோடு முன்னாள் சி எஸ் கே வீரர்… வைரலாகும் புகைப்படம்!

சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளஸ்ஸி தோனியோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த டு பிளஸ்சி இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதான கேப்டனாக டு பிளஸ்சி இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது பயிற்சியின் போது அவர் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த புகைப்படத்துக்கு சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் எமோஷனலான கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.