செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2025 (17:28 IST)

மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதின

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, மலேசியா அணி பேட்டிங் செய்தது. முதல் ஓவரில் இருந்து இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சு அனல் பறந்த நிலையில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில்  31 ரன்களுக்கு மலேசிய அணி ஆட்டம் அழைத்தது. அந்த அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை என்பதும் நான்கு பேர் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 32 ரன்கள் இலக்கு என்பதை நோக்கி விளையாடிய இந்திய அணி 2.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மலேசிய அணியை வீழ்த்தியது.

 டி20 போட்டி ஒன்றில் 3 ஓவருக்குள் ஆட்டம் முடிந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva