திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (09:38 IST)

இந்திய அணி ச்சோக்கர்ஸ்தான்… அதை மறுக்கவில்லை… கபில்தேவ் கடும் விமர்சனம்!

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே இந்திய அணி அரையிறுதிக்கே செல்லாது என கூறியவர் கபில்தேவ்.

டி 20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய அணி டாப் 4 அணிகளுக்குள் வர 30 சதவீத வாய்ப்புகள்தான் உள்ளது எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி தற்போது இறுதிப் போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் ”போட்டி முடிந்துவிட்டது. இனிமேல் இந்திய வீரர்களைக் கடுமையாக விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆம் இப்போதும் சொல்கிறேன் இந்திய அணி ச்சோக்கர்ஸ்தான். அதை மறுக்கவில்லை. முக்கியமான போட்டிகளில் அவர்கள் திணறுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.