இந்தியாவில் ப்ளூ டிக் பெற எவ்வளவு கட்டணம்? எலான் மஸ்க் அறிவிப்பு!
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சிஇஓ உள்பட முக்கிய பணியாளர்களை எலான் மஸ்க் வீட்டுக்கு அனுப்பினார் என்பதும் தெரிந்ததே. அது மட்டுமின்றி டுவிட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இந்தியாவில் உள்ளவர்கள் ரூபாய் 719 செலுத்தி எந்தவித சரி பார்ப்பும் இன்றி டுவிட்டரில் ப்ளூ டிக் அடையாளத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
ப்ளூ டிக் பயனாளர்களின் ஆவண சரிபார்ப்பு நடைமுறை இருந்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு மட்டும் ஆவண சரிபார்ப்பு இன்றி 719 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது இந்த சேவையை ஐபோனில் மட்டும் கிடைக்கிறது என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கிடைக்கும் என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Edited by Siva