செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (13:54 IST)

அணிக்குள் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்… டாஸ் வென்ற இங்கிலாந்து எடுத்த முடிவு!

உலகக் கோப்பை தொடர் தொடங்கி இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.  அதுபோல தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமாவுக்கு பதில் எய்டன் மர்க்ரம் கேப்டனாக இன்றைய போட்டியில் செயல்படுகிறார்.

இங்கிலாந்து அணி
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(w/c), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி

தென்னாப்பிரிக்க அணி
குயின்டன் டி காக்(w), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி