1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (09:13 IST)

பாகிஸ்தானில் ரசிகர் ஒருவர் என் மேல் ஆணியை வீசினார்.. இர்பான் பதான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஒருசாரார் ஆதரவும் மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை இப்போது கிரிக்கெட் உலகில் கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போது ஐசிசி வசம் புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி இது சம்மந்தமாக பிசிசிஐ-யிடம் விசாரணை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தனக்கு நடந்த மிக மோசமான சம்பவம் ஒன்றைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார். அதில் “நான் பாகிஸ்தான் சென்ற போது ரசிகர் ஒருவர் என் மேல் ஆணியை வீசினார். அது என் கண்ணுக்குக் கீழே பட்டது. அதை நாங்கள் பெரிது பண்ணவில்லை. அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி பேசினோம். இந்தியாவில் பார்வையாளர்கள் நடந்துகொண்ட விதம் பற்றி பாகிஸ்தான் பிரச்சனையாக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.