செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (07:29 IST)

ஆஷஸ் தொடர்: மூன்றாவது போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 60 ஓவர்களில் 263 ரன்கள் ஆட்டம் இழந்தது. மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.  இங்கிலாந்து அணியின் மார்க் வுட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை சாய்த்தார்.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ரன்களைக் குவிக்க தடுமாறியது. இங்கி. அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸி அணி 25 ரன்கல் முன்னிலை பெற்றது.

25 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 254 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன.

அந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சடசடவென விக்கெட்களை இழந்தாலும், அந்த அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் நிலைத்து நின்று ஆடி 75 ரன்கள் சேர்த்தார். பின்னர் பின்வரிசை வீரர்களான கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் அதிரடியாய் விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்திய மார்க்வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.