வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (17:12 IST)

ஆஷஸ் டெஸ்ட்.. வெற்றியை நெருங்கிவிட்டது இங்கிலாந்து..!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது 
 
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் முதலில் இன்னிங்ஸில்  237 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளது 
 
 இன்று நாள் நான்காவது நாள் போட்டி தான் நடைபெற்று வரும் நிலையில் 7 விக்கெட் கையில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva