1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (18:59 IST)

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

Gautam Gambhir
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் பதவி வகித்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிப்பட்டது. அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் ஒருவர்.

முன்னதாக லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த கவுதம் கம்பீர் அந்த அணியை அரை இறுதி வரை கொண்டு சென்றார். தற்போது கொல்கத்தா அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. அதையடுத்து ஷாரூக்கான் அவருக்கு ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்கும்படி பிசிசிஐ அணுகியதாகவும், அதற்கு கவுதம் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K