வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (14:27 IST)

இம்பேக்ட் ப்ளேயர் விதி நீக்கமா…அணிகளின் எதிர்ப்புக்குக் காதுகொடுத்த பிசிசிஐ!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனால் பவுலர்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச அழைக்கப்படுவதும் குறைந்துள்ளது. இந்த விதிகுறித்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது பிசிசிஐ இந்த விதியைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்த விதி பயன்பாட்டில் இருக்காது என சொல்லப்படுகிறது.