வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (18:57 IST)

தகர்ந்த உலகக்கோப்பை கனவு: இந்திய அணியில் இருந்து தூக்கப்படும் முக்கிய வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில், அணியில் இருந்து இரண்டு வீரர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. 
 
உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நியூசிலாந்த் மற்றும் இங்கிலாந்த் அணி இறுதிப்போட்டியில் மோத உள்ளது. 
 
தொடரின் துவக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் அரையிறுதியில் சொதப்பினர். குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்களும் நடுவரிசை ஆட்டக்காரர்களும் சொதப்பினர்.
 
இந்நிலையில், இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு இனி அடுத்த சில ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.