1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (18:18 IST)

இந்திய அணியுடனான புகைப்படத்தில் மது பாட்டில் வைத்திருந்தாரா ரவி ஷாஸ்த்ரி?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்த்ரியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் அவருடைய இருக்கையின் அடியில் மது பாட்டில் ஒன்று இருக்கிறது.
இந்த படத்தில் ரவி ஷாஸ்த்ரியின் இடது பக்கம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார் பின்னால் யுகேந்திர சாஹல் சுழற்பந்து வீச்சாளர் நின்று கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் 20000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ள ரவி ஷாஸ்த்ரியின் இந்த புகைப்படத்திற்கு மக்கள் , ”தன்னுடைய அணியுடன் புகைப்படம் எடுக்க செல்லும்பொது பயிற்சியாளர்களுக்கு எந்த விதிமுறையும் இல்லையா? இது குறித்து பிசிசிஐ விளக்கம் கேட்க வேண்டும்” என கருத்து கூறியுள்ளனர்.
 
செவ்வாயன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மழையால் தடைப்பட்டது. அதன்பின் இந்த புகைப்படம் வைரலானது.
 
புகைப்படத்தின் உண்மை
 
இந்த புகைப்படம் ஜுலை 6 அன்று இலங்கை அணிக்கு எதிராக இந்தியா ஆடுவதற்கு முன்னால் எடுத்த புகைப்படம் ஆகும்.
 
சிலர் ரவி ஷாஸ்த்ரியை குறிவைத்து அந்த புகைப்படத்தை மார்ஃப் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
 
பிசிசிஐ தன்னுடைய அதிகார ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைபடத்தை "ஒரு அணி, ஒரே நாடு, ஒரே உணர்வு" என்று எழுதி பதிவு செய்துள்ளனர்.