இந்திய அணியின் தோல்வியை விட இதுதான் ரொம்ப வலிக்குது: கஸ்தூரி வருத்தம்

Last Updated: புதன், 10 ஜூலை 2019 (21:46 IST)
இன்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வியை இன்னும் பலரால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. தோல்விக்கு காரணம் நேற்றைய மழை, முதல் மூன்று விக்கெட்டுக்கள், தோனியின் ரன் அவுட் என பலவிதங்களில் அலசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது நடிகை கஸ்தூரி அவ்வப்போது ரன்களை பதிவு செய்து இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய டுவீட்டில் கமெண்ட் அளித்த ஒருவர் 'இந்தியா தோக்கணும்' என்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவை பார்த்த கஸ்தூரி, 'இந்திய அணியின் தோல்வியை விட இந்த பதிவுதான் என்னை ரொம்ப பாதிக்க வைத்தது. இவன் எந்த ஊர்? எந்த நாடு? இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க ? என்று வருத்தத்துடன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு குவிந்து வருவதோடு, 'இந்தியா தோக்கணும்' என்று கூறிய நபருக்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்றாலும் விளையாட்டை மதத்தோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :