திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (15:13 IST)

மனைவிகளை கிரிக்கெட் பேட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் சர்ச்சை! – மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையில் தினேஷ் கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வரும் நிலையில் அந்த போட்டியை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக தொகுத்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது கிரிக்கெட் பேட்டை மற்றவர்கள் மனைவியுடன் அவர் தொடர்பு படுத்தி நகைச்சுவையாய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள தினேஷ் கார்த்திக் “நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. ” என்று தெரிவித்துள்ளார்.