வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (09:05 IST)

கால் இறுதியில் கலக்கிய அணிகள்; அரையிறுதியில் யார்? யார்? – ஈரோ உலகக்கோப்பை!

பரபரப்பாக நடந்து வரும் ஈரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் அறை இறுதி போட்டிக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. 26 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் பல்வேறு கட்ட ஆட்டங்களுக்கு பிறகு நேற்றுடன் கால் இறுதி போட்டிகளும் முடிவடைந்துள்ளன.

கால் இறுதி போட்டியில் வெற்றிபெற்ற 4 அணிகள் அரையிறுதியில் மோதிக் கொள்கின்றன. அதன்படி இத்தாலி – ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து – டென்மார்க் இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் மோதிக் கொள்ள உள்ளன.