ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (23:05 IST)

ரூ.17 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அரசியல் பிரபலம்

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் கிர்க்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, சுமார் 9 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அம்ரிந்தர் சிங்கிற்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கும் கடுமையான அரசியலில் மோதல் நடைபெற்று வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக இருந்து அக்கட்யின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இணைந்தார். தற்போது காங்கிரஸில் எல்லோருக்கும் தெரிந்த அரசியல் பிரபலமாக உள்ள சித்துவிற்கும் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே அரசியலில் மோதல் போக்கு நீடிக்கிறது.சமீபத்தில் அம்மாநிலத்தில் நிலவும் மின்நெருக்கடி குறித்து அறிவுரை கூறிய சித்து,  இதுவரை ரூ.17 லட்சம் மின்கட்டணம் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், இந்தக் கட்டணத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.10 லட்சம் மட்டு கட்டியுள்ளதாகவும், மீதி 8.67 லட்சம் நிலுவை வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.