திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (19:39 IST)

3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்

‘3 பாடல்களுக்கு நடனமாடினால் மட்டும் போதுமா?’ என்ற காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.
 
மகளிர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்றினார் நடிகை ஆண்ட்ரியா. அப்போது பேசிய அவர், “என் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தரமணி’. அந்தப் படம் எல்லோருக்கும் பிடித்திருந்தும், என் நடிப்பு பாராட்டப்பட்டும், அதற்கடுத்து எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
 
ஆனால், விஜய்யுடன் நடிக்கும் ஒரு ஹீரோயின் வெறும் 3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதும். அந்தப் படம் ஹிட்டாகி, உடனே அந்த நடிகைக்கு பல வாய்ப்புகள் குவியும். ஒரு நடிகையின் மதிப்பு, அவருடன் நடிக்கும் சக நடிகரை வைத்து ஏன் மதிப்பிடப்பட வேண்டும்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.