ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (17:15 IST)

புதிய இந்திய அணி ஜெர்சியில் தோனி; எல்லாம் கனவா போச்சே! – ஏக்கத்தை வெளிப்படுத்தும் ரசிகர்கள்!

இந்திய அணிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாஸ்டால்ஜிக் ஜெர்சியில் முன்னாள் கேப்டன் தோனி அணிந்திருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயண ஆட்டம் நாளை தொடங்க உள்ளது. இதற்காக முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்ற வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள ஜெர்சி வைரலாகியுள்ளது. 1992 உலக கோப்பையின்போது இந்திய அணி அணிந்திருந்த அடர்நீல நிற ஜெர்சி மாடலை போலவே புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய ஜெர்சியில் முன்னாள் கேப்டன் தோனியை காண முடியவில்லையே என வருத்தப்பட்ட ரசிகர்கள் அவரை புதிய ஜெர்சி அணிந்திருப்பது போல கிராபிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சினிமா இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பல பிரபலங்களை அதை பகிர்ந்து அணியில் தோனி இல்லாதது குறித்த வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.