1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni talked about his retirement after winning trophy

ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்… ஆனால்? – தோனி சொன்னது என்ன?

சென்னை
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சீசன்தான் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி நேற்று கோப்பையை வென்றதும் அதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோப்பையை பெற்ற பின்னர் பேசிய தோனி ஓய்வு பற்றி யோசிக்க இன்னும் 6 மாத காலம் நேரம் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் என் கண்கள் நிறைந்தன. அதை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டுமென தோன்றுகிறது. நியாயமாக இப்போதே என் ஓய்வை அறிவித்தால்தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அடுத்த ஒரு சீசன் விளையாடி ரசிகர்களுக்கு பரிசு தரவேண்டும் என தோன்றுகிறது” எனப் பேசியுள்ளார்.

இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
முடிந்தது ஐபிஎல் 2023… பரிசுத்தொகை யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!