1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:20 IST)

வருங்கால மனைவி மற்றும் தோனியுடன் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ்: வைரல் புகைப்படங்கள்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோனி மற்றும் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் நேற்று வெற்றி பெற்ற ஐபிஎல் கோப்பை மற்றும் தனது வருங்கால மனைவி உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ், இந்த சீசனில் அபாரமாக விளையாடினார் என்பதும் பல போட்டிகளில் வெற்றி பெற அவர் ஒரு காரணமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே. நேற்றைய போட்டியில் கூட அவர் அபாரமான தொடக்கத்தை கொடுத்தார். 
 
இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றவுடன் தனது வருங்கால மனைவியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தோனி மற்றும் வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எனது இரண்டு விவிஐபிக்கள் என்று கூறியுள்ளார்.
 
 மேலும் நேற்று வெற்றி பெற்ற கோப்பையுடனும், வருங்கால மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Siva