1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:35 IST)

மஞ்சள் படைக்கு எனது வாழ்த்துக்கள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு எனது வாழ்த்துக்கள். துன்பங்களை எதிர்கொண்டு சென்னை அணிக்கு வரலாற்று வெற்றியை ஜடேஜா உறுதிப்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார். 
 
தமிழக முதல்வர் மட்டுமின்றி பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தல தோனிக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் Congratulations CSK என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva