செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (11:57 IST)

6 இன்னிங்ஸிலும் நாட் அவுட்… பினிஷிங் குமார் தோனியின் புதிய சாதனை!

நேற்று லக்னோ மற்றும் சி எஸ் கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 176 ரன்கள் சென்னை அணி சேர்க்க, அதை எளிதாக 19 ஆவது ஓவரில் எளிதாக வென்றது லக்னோ அணி.

இந்த போட்டியில் சென்னை அணி பேட் செய்த போது 18 ஆவது ஓவரில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார் தோனி.

இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் தோனி 20 ஆவது ஓவரில் மட்டும் 65 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் இதுவரை அடித்துள்ளார். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கையாகும். அதே போல 19 ஆவது ஓவரில் 40 சிக்ஸர்களும், 18 ஆவது ஓவரில் 39 சிக்ஸர்களும் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

அதே போல 2024 சீசனில் தோனி களமிறங்கிய 6 போட்டிகளில் 34 பந்துகளை எதிர்கொண்டு 87 ரன்களை சேர்த்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் இந்த 6 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.