தொடர்புடைய செய்திகள்
- ஜடேஜா அரைசதம்… தோனியின் கடைசி நேர கேமியோ… சென்னை அணி நிர்ணயித்த இலக்கு!
- லக்னோ - சிஎஸ்கே போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரம்..!
- ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா லக்னோ? பலம்மிக்க சென்னை அணியோடு இன்று மோதல்!
- செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
- டாஸ் சர்ச்சையால் எடுக்கப்பட்ட புதிய முடிவு… காயினுக்கு க்ளோஸ் அப்!
பினிஷிங் குமார் தோனியின் கடைசி ஓவர் சாதனைகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஏமாற்றம் அளிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜா மற்றும் மொயின் அலி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த போட்டியில் 18 ஆவது ஓவரில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார் தோனி.
இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் தோனி 20 ஆவது ஓவரில் மட்டும் 65 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் இதுவரை அடித்துள்ளார். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கையாகும். அதே போல 19 ஆவது ஓவரில் 40 சிக்ஸர்களும், 18 ஆவது ஓவரில் 39 சிக்ஸர்களும் விளாசி முதலிடத்தில் உள்ளார்.