ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (07:41 IST)

சி எஸ் கே நிர்ணயித்த இலக்கை எளிதாக வென்ற லக்னோ… ராகுல் அபார ஆட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஏமாற்றம் அளிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜா மற்றும் மொயின் அலி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த போட்டியில் 18 ஆவது ஓவரில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார் தோனி.  இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டிகாக் 54 ரன்களும் கே எல் ராகுல் 82 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது.