ஐபிஎல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் தோனி: வைரல் வீடியோ

dhoni
Last Modified வெள்ளி, 23 மார்ச் 2018 (18:25 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 11 வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியது. இதன்படி முதல் போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
2-ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கவுள்ளது. அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஸ்வினை தவிர சென்னை அணியில் இடம்பிடித்திருந்த அனைத்து நட்சத்திர வீரர்களும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
 
 
இந்நிலையில், வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள மும்பைக்கு எதிரான போட்டிக்காக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் தனது அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 Thanks- Lecolors Tamil Entertainment
 

 
Lecolors Tamil Entertainment
 


இதில் மேலும் படிக்கவும் :