செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (13:27 IST)

தோனியில்லாமல் உலகக் கோப்பையை வெல்ல முடியாது; சேவாக்

அடுத்த அண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல இளம்வீரர்களுக்கு தோனியின் வழிகாட்டுதல் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

 
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன்பின்னர் தோனி வெற்றி கேப்டனாக வலம் வந்தார். நெருக்கடி காரணமாக தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தற்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. தோனி தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
 
தோனி சில போட்டிகளில் சிறப்பாக செயல்படாமல் போனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகிறது. இன்னும் தோனி அணிக்கு தேவையான பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சில இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தோனிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது சேவாக் தோனி வழிகாட்டுதல் மூலமே இந்திய உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய போது எனக்கு கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதுபோன்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு தோனியின் வழிகாட்டுதல் அவசியம் என்று கூறியுள்ளார்.