பந்து வீச்சாளர் ஷமிக்கு ஆதரவு தெரிவித்த தோனி

dhoni
Last Modified செவ்வாய், 13 மார்ச் 2018 (17:29 IST)
இந்திய அணி வீரர் ஷமிக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
 
முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள். என கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
இந்த பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதால் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவாரா? என்பதும் தெரியவில்லை.
 
இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் தோனி பேசியதாவது, ஷமி எனக்கு தெரிந்தவரை ஒரு நல்ல மனிதர். அவர் தன்னுடைய நாட்டை மற்றும் மனைவியை ஏமாற்றி இருக்க மாட்டார். இது அவரது தனிப்பட்ட வாழக்கை. இதற்கு மேல் நான் எந்த கருத்தும் கூற முடியாது என்று பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :